கணக்கியல் துறை இன்று வெறுமனே வரவு-செலவுகளைப் பதிவு செய்யும் பணியாக இல்லை. செயற்கை நுண்ணறிவு, நிறுவன வளத் திட்டமிடல் அமைப்புகள் (ERP), டிஜிட்டல் கொடுப்பனவுகள், தரவு பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் வரி நிர்வாகம் ஆகியவை கணக்காளரின் பணியின் இயல்பையே மாற்றி வருகின்றன. இலங்கையிலும் இந்த மாற்றத்தின் முக்கியமான பகுதியாக Electronic Invoicing (e-Invoicing) உருவாகி வருகிறது.

2026ஆம் ஆண்டில் Inland Revenue Department (IRD), தெரிவுசெய்யப்பட்ட VAT பதிவு செய்தவர்களின் ERP அமைப்புகளிலிருந்து VAT invoice தரவுகளை Web API மூலம் RAMIS-க்கு அனுப்பும் முன்னோடித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.தேசிய e-Invoicing முறையை கட்டப்படியாக நடைமுறைப்படுத்தும் இந்த முயற்சி, கணக்கியல் மற்றும் வரி நிர்வாகத்தில் தரவு ஒருங்கிணைப்பைநோக்கிய முக்கியமான முன்னேற்றமாகும்.

e-Invoicing ஏன் முக்கியம்?

பாரம்பரிய முறையில் ஒரு விற்பனை invoice தயாரிக்கப்பட்ட பின்னர், அதன் தகவல்கள் கணக்கியல் பதிவுகள், VAT பதிவுகள் மற்றும் வரி அறிக்கைகளில் பல்வேறு கட்டங்களில் கையாளப்படலாம். இதனால் மீள்பதிவு, தரவு முரண்பாடு மற்றும் மனிதப் பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

டிஜிட்டல் ஒருங்கிணைப்பு வளரும்போது செயல்முறை:

விற்பனை → ERP Invoice → Digital Data → RAMIS → Tax Reporting என்ற வடிவத்தை நோக்கி நகர்கிறது.

இதன் மூலம் ஒரே பரிவர்த்தனைத் தரவை மீண்டும் மீண்டும் பதிவு செய்வதற்கான தேவை குறையக்கூடும். அதேவேளை, invoice-இல் ஆரம்பத்திலேயே சரியான தகவலைப் பதிவு செய்வது மிகவும் முக்கியமாகிறது.

ஒரு நடைமுறை உதாரணம்

ஒரு VAT பதிவு செய்த மொத்த விற்பனை நிறுவனம் ரூ.1 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை விற்பனை செய்கிறது எனக் கருதுவோம்.

Invoice உருவாக்கும்போது பொருளின் அளவு, விற்பனை மதிப்பு அல்லது VAT தொடர்பான தகவலில் தவறு ஏற்பட்டால், அந்தத் தவறு பின்னர் accounting records மற்றும் tax reporting-ஐப் பாதிக்கக்கூடும்.

2026ஆம் ஆண்டின் VAT tax invoice specifications-ல் invoice number, invoice date, date of supply, பொருள் அல்லது சேவையின் விளக்கம், quantity, supply value, VAT மற்றும் total consideration போன்ற தகவல்கள் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனால் டிஜிட்டல் கணக்கியல் சூழலில் “தரவு சரியாக இருந்தால்தான் அறிக்கையும் சரியாக இருக்கும்” என்ற அடிப்படைக் கோட்பாடு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

e-Invoicing வளரும்போது கணக்காளர் வெறுமனே invoice பதிவு செய்பவராக இருக்க முடியாது. ERP-ல் உருவாகும் தரவு சரியானதா, VAT treatment பொருத்தமானதா, invoice விவரங்கள் முழுமையானதா,கணக்கியல் பதிவுகளுக்கும் supporting documents-க்கும் இடையில்முரண்பாடு உள்ளதா என்பதையும் அவர் கண்காணிக்க வேண்டும்.

இதனால் கணக்காளரின் பணி:

Data Entry → Data Validation → Compliance → Analysis

என்ற பரந்த திசையை நோக்கி நகர்கிறது.

2026ஆம் ஆண்டு revised VAT tax invoice format தொடர்பாக IRD வெளியிட்ட சுற்றறிக்கையும் invoicing practices-ஐ standardize செய்தல், VAT reporting accuracy மற்றும் consistency-ஐ மேம்படுத்துதல், tax verification மற்றும் audit

செயல்முறைகளை எளிதாக்குதல் போன்ற நோக்கங்களை குறிப்பிடுகிறது.

CMA நிபுணருக்கான புதிய வாய்ப்பு

இங்கு Management Accounting-ன் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.

ஒரு நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான invoices வெறும் வரி ஆவணங்களாக இல்லாமல் வணிகத் தரவாகவும் பயன்படுத்தப்படலாம்.

உதாரணமாக:

Invoice Data → Sales Analysis → Cost Analysis → Profitability → Management Decision

என்ற செயல்முறையின் மூலம் எந்தப் பொருள் அதிகமாக விற்பனையாகிறது, எந்த வாடிக்கையாளர் பிரிவு அதிக வருவாய் வழங்குகிறது, எந்தப் பகுதியில் விற்பனை குறைகிறது போன்ற கேள்விகளுக்கு முகாமைத்துவத் தீர்மானங்களுக்கு உதவும் தகவல்களைப் பெற முடியும்.

இதனால் CMA நிபுணரின் பங்கு bookkeeping-ஐத் தாண்டி business analysis மற்றும் decision support நோக்கி விரிவடைகிறது.

சிறு வணிகங்களிலும் டிஜிட்டல் மாற்றம்

டிஜிட்டல் மாற்றம் பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் உரியது அல்ல. LANKAQR போன்ற டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் சிறு வணிகங்களிலும் cashless transactions-ஐ அதிகரிக்கின்றன. Central Bank of Sri Lanka, LANKAQR சிறு வணிகர்களுக்கு டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள உதவுவதுடன் cash handling தொடர்பான செலவுகளைக் குறைக்கக்கூடியதாக விளக்குகிறது.

இதனால்:

Digital Payment → Bank Transaction → Accounting Record → Reconciliation

என்ற புதிய தரவு ஓட்டம் உருவாகிறது.

சவால்களும் உள்ளன

e-Invoicing தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது மட்டும் போதாது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில்நுட்பத் தயார்நிலை, பணியாளர்களுக்கான பயிற்சி, ERP ஒருங்கிணைப்பு, cybersecurity மற்றும் data quality ஆகியவை கவனிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, “Wrong Data In - Wrong Information Out” என்ற கருத்து டிஜிட்டல் கணக்கியல் சூழலில் முக்கியமானது. தானியக்க அமைப்பு தவறான தரவைத் தானாகச் சரிசெய்யாது.

முடிவுரை

இலங்கையில் உருவாகி வரும் e-Invoicing மற்றும் டிஜிட்டல் வரி நிர்வாகம், invoice தயாரிக்கும் முறையில் ஏற்படும் மாற்றத்தைவிடப் பெரிய பரிணாமமாகும். இது கணக்கியல், வரி இணக்கப்பாடு, தரவு முகாமைத்துவம் மற்றும் முகாமைத்துவ தீர்மானமெடுத்தல் ஆகியவற்றை ஒரே டிஜிட்டல் சூழலுக்குள் கொண்டு வரும் முயற்சியாகும்.

எதிர்கால கணக்காளர் வெறுமனே “கணக்குகளைப் பதிவு செய்பவர்” அல்ல. தரவைச் சரிபார்த்து, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வரி இணக்கப்பாட்டை உறுதிப்படுத்தி, தரவிலிருந்து முகாமைத்துவம் பயனுள்ள தகவலை வழங்கும் நிபுணர் என்பதே அவரது புதிய பரிமாணமாக இருக்கும்.

கணக்கியல் மாறிக்கொண்டிருக்கிறது; அதனுடன் கணக்காளரின் பங்கும் மாறிக்கொண்டிருக்கிறது.

உசாத்துணைகள்

• Inland Revenue Department - ERP/RAMIS Web API e-Invoicing Notice

• Inland Revenue Department - Revised Tax Invoice Format Circular

• Inland Revenue Department - 2026 Tax Invoice Gazette

• Central Bank of Sri Lanka - LANKAQR